Tamileelam National Heroes Day Nov 27
- Wix Wix
- 27 nov 2025
- 1 minuten om te lezen
தமிழீழக் கனவை நெஞ்சினில் சுமந்து
விடுதலைக் களம் நோக்கி வீர நடை நடந்த எம் தேசத்து வீரர்களே!
உறவுகள் கூடி வருகின்றோம் உங்கள் இருப்பிடம் தேடியே!
தலைவனின் படை சேர்ந்து
பகைவரை களையறுக்க,
தமிழனின் வீரம் நிலைநாட்ட
தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் தேசத்து புதல்வர்களே !
ஈழ தேசத்தை மீட்டெடுப்போமென தமக்குள்ளே சத்தியம் செய்து கரிகாலன் வழி நின்ற வீர மறவர்களே!
சிங்கள படைகளைக் கண்டு அஞ்சாது,
நெஞ்சை நிமிர்த்தி வீரமுடன் களமாடிய புலி வீரர்களே!
முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல!
நீங்கள் கண்ட தேசக் கனவுகள் வெறும் கனவுகளாக மட்டும் மரணித்து விடாது உறவுகளே...!
தலைவனின் சிந்தனைகள் எங்களை வழி நடத்தும்
மா வீரர்களின் தியாகங்கள் எமக்கு உந்து சக்தியாகும்...
புனித மண்ணில் பிறந்தவர்கள் நீங்கள்!
புண்ணகையுடன் போர்க்களம் சென்றவர்கள் நீங்கள்!
உங்களின் தியாகம் தாரகை போன்று வானில் ஒளிரும் தமிழினம் விடுதலையடையும் தருணம்!
உங்கள் தேசக் கனவுகள் மலரும்,
கரிகாலன் படை வெல்லும்
வானுயர பறக்கும் நம் தேசியக்கொடி....
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு


.png)



Opmerkingen