top of page
Registration form



Iruthi Vanakkam - Jeyanthan Ramachandiran
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீது ஆழமான பற்றுதல் கொண்டு, பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகப் பத்தாண்டுகளுக்கு மேலாக அயராது செயற்பட்டுவந்த ஜெயந்தன் இராமச்சந்திரன் அவர்கள், ஐக்கிய இராச்சிய வடமேற்குப் பிராந்தியப் பொறுப்பாளராகச் செயற்பட்டதுடன், தமிழ் இளையோர் அமைப்பின் செயற்திட்டங்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வந்தவராவார். இவர் 03/12/2025 அன்று அகாலச் சாவடைந்துள்ளார். இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Maaveerar naal 2025 - Finland
பின்லாந்தில் பெருந்திரளான மக்களின் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025 அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன. இறுதியில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு அதன் பின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதியில் எமது தாரக மந்திரமாம் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற கோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.


Maaveerar naal germany tyo speech
யேர்மனியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நிகழ்வில் யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி அக்ஷ்யா அவர்கள் ஆற்றிய சிறப்புரை. மாவீரர்களின் மகத்தான தியாகங்களையும் அத்துடன் நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் எமது கலாச்சாரத்தை மறந்து பொழுதுபோக்கு ஊடகங்களில் பரப்பப்படும் அந்நிய பண்பாட்டு விழுமியங்களின் வலையில் அகப்பட்டு விடாமல் தமிழீழம் கிடைக்கும் வரை இளையோராகிய நாம் தொடர்ந்து போராடி மாவீரர்களின் தியாகத்தை பிரதிபலிக்க வேண்டும் என எழுச்சியாக உரையாற்றியிருந்தார்.


Pray for tamileelam
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத் துயர் நிறைந்த காலத்தில் எம் தாயக உறவுகளோடு நாம் துனை நிற்பதோடு எமது உறவுகள் வெகுவிரைவில் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டி நிற்கின்றோம். மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்


Maaveerar naal special speech by tyo
டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. மதுசா அவர்கள் வழங்கிய சிறப்புரை. இச் சிறப்புரையில் மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் 2009ற்கு பிறகு புலம்பெயர் தேசங்களில் எமது கட்டமைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஐக்கிய நாடுகள் சபைகளில் சிங்கள அரசின் கபட நாடகங்களையும் எடுத்துக்கூறியதுடன் எனிவரும் காலங்களில் எமது அடுத்த சந்ததி எவ்வாறு விழிப்புடன் தேசியம் சார்ந்து முன்னகர வேண்டும் என்றும் சிறப்பாக எடுத்துரைத்தி
bottom of page
